*(சேலம், அரசு கலை கல்லூரி-7arts)*

*(நீங்க நினைவுகள்)*

*சேலம்.07 ல் அமைந்திருக்கும் 7arts, மாநகரின் மத்தியில் இருப்பதால் புறநகர் மற்றும் மாவட்டத்தின் பல கிராமங்களிலிருந்து மாணவ,மாணவிகள் வந்து படிப்பார்கள்..!!!*

*இங்குதான் BA, Bsc, BBA இளங்கலை முதல் MA, MCA, M.phil, & Phd டாக்டரேட் வகுப்புவரை படிப்பு உள்ளது..!!!*

*வறுமையில் இருந்தபோதும் கவலைகள் இல்லாமல் இருந்த காலம் 7arts கல்லூரி காலம், அந்த காலம்தான் வகுப்பறை வசந்தத்தை தந்தது..!!!*

*7arts எங்களுக்கு எத்தனையோ பாடங்களை கற்றுதந்தது, 7Bus SVL தோழமையையும்-காதலையும் பெற்றுதந்தது, ஆனால் ஏனோ, அதனை பிறிந்து கவலைபடாமல் எப்படி வாழ்வதுஎன கற்றுத்தரவில்லை..!!!*

*சுவரில் நாங்கள் கிறுக்கிய கிறுக்கல் எல்லாம் காணநேர்ந்தால் சுகமாய் ரணக்கிறது..!!!*

*வகுப்பு ஒருபுறம் நடந்துக்கொண்டிருக்க நாங்கள் மறுபுறம் கேன்டீன்-ல் டீ சாப்பிடுட்டு கடலை போட்டுட்டு இருந்த நினைவுகள் மறவா நினைவுகளாகவே சுழல்கிறது..!!!*

*எப்போதும் பத்து பேராக அமர்ந்து வம்பிழுக்கும் கம்பக்கல் அந்த பத்து பேர் இல்லாமையால் தனிமையில் வாடுகிறது..!!!*

*வேண்டுமென்றே வம்பிழுக்கும் போதும் புன்னகையால் சமாளித்த சகதோழிகளை எண்ணி பல தனிமைகள் தனக்கிறது..!!!*

*7arts வாழ்க்கையை நினைக்கும் போது மகிழ்ச்சி ஏற்படுகிறது ஆனால், அதை இழந்துவிட்டோம் என நினைக்கையில் மனம் தாங்கவில்லை..!!!*

*அரியரைக்கூட ஏற்ற மனம் பிரிவை ஏற்க மறுத்தது..!!!*

*சின்ன சின்ன சண்டைகள், சின்ன சின்ன லவ்ஜிகாத்-கள்(காதல் போராட்டம்) எல்லாமே மீண்டும் மீட்க முடியாத பேரின்பமானது..!!!*

*நண்பனுக்கு ஒரு பெண் மீது வந்த ஈர்ப்புகள், அது காதலாக மாறிய நிமிடங்கள், காதலை சொல்ல முடியாமல் புலம்பிய புலம்பல்கள், சொன்னபின் அடைந்த ஏமாற்றங்கள், அவன் பல்பு வாங்கியதை கண்டு நாங்கள் அடைந்த சந்தோஷங்கள்,* *கடைசி நாள் சரக்குகள் (ம) கண்ணீர் நினைவுகள் எல்லாம் சுமக்கமுடியா சுமையாகவே கடக்கிறது..!!!*

*அண்ணா என்று அழைத்த ஜூனியர் பெண்கள், அப்படிமட்டும் சொல்லாதம்மா என கெஞ்சிய என் அன்பு நண்பன் எல்லாம் நினைவின் வடிவங்களாக நீழ்கிறது..!!!*

*அசைன்மென்ட் எல்லாம் ஜீனியர் தோழிகளிடம் எழுதி வாங்கி சில போராசிரியர்களிடம் மதிப்பெண் பெற்றது எல்லாம் கண்ணில் கலந்த கணைகளாக சுடர்கிறது..!!!*

*மே மாதம் முடிய போகிறது, இதே மே மாதம் 20__ ல் எங்கள் 7arts வாழ்க்கை முடிந்தது....?*

*2017 இம்மாதத்தோடு ஓர்சில ஆண்டுகள் முடிகிறது.......*

*இந்த ஓர்சில ஆண்டுகளில் 7arts கல்லூரிக்குள் சில முறைமட்டும்தான் சென்றிருக்கிரேன்., சில காரணங்களுக்காக மட்டும்..!!!* *("ஷைட் அடிக்க அல்ல")*

*வாரத்தில் ஒரு முறையாவது அவ்வழியே செல்வேன் ஆனால், உள்ளே செல்ல மனம் தாங்காது..!!!*

*பல 7arts நண்பர்களையும், 7 bus & SVL பேருந்து தோழமைகளையும் நான் இழந்துவிட்டேன்..!!!*

*சிலரை பல மாத தேடலுக்குபின் முகநூலில் கண்டுபிடித்தேன்..!!!*

*7arts ல் ஏராளமான போராசிரியர்கள் நண்பர்களை போல நடந்து கொண்டதும்,*
*பாசத்துடன் பேசியதும் மறக்கமுடியாத நாட்கள்......*

*இன்னும் நினைவுகள் ஏராளம், மனதின் வலியோ தாராளம்*

( *லவ்ஜிகாத்MMS..!!!* *7* & *30D* )

*என் 7arts வாழ்க்கை ,--- "நிலாக்காலம்" மட்டுமல்ல,,--- "பொற்காலமும்"கூட...*

Share feeling person

கருத்துகள்