என்னிடமிருந்த அசுரத்தனம் இப்போது குறைந்துவிட்டது. சண்டை என்று வந்துவிட்டால் முதலாவதாக நீளும் என் கரங்கள் இப்போது தாழ்ந்து போக பழகியிருக்கிறது. யாராவது கேவலமாக திட்டினாலோ வெறி கொண்டு அடித்தாலோ சிரிப்பு வந்து தொலைக்கிறது. என் நண்பர்கள் என்னை நீ மாறிவிட்டாய் திருந்திவிட்டாய் இந்த மாற்றம் நன்றாக இல்லை என்று சொல்லி திட்டுகிறார்கள். என்னை பொறுத்தவரை ஒருவன் திருந்தவே முடியாது. அனைவருக்குள்ளும் நல்லவனும் கெட்டவனும் கோபமும் அன்பும் காதலும் வன்முறையும் புரையோடிப் போய்க்கிடக்கிறது. அது காலமாற்றத்தை பொருத்து ஒன்று மாறி ஒன்று மேலெழும்பிக் கொண்டே இருக்கும். எனக்கு இந்த மாற்றம் பிடித்திருக்கிறது. என் நரம்புகளில் தெறித்தோடும் திமிரு இப்போது குறைந்திருக்கிறது. பரமபிதா இயேசு சொல்வதைப் போல இன்னொரு கண்ணத்தையும் காட்ட ஆரம்பித்திருக்கிறேன் அதுவும் குறுஞ்சிரிப்புடன்.
அன்புடன் பாயூ

கருத்துகள்
கருத்துரையிடுக