Mrinal Sen (14 May 1923 – 30 December 2018)
இயக்குனர் மிருணாள் சென் பிறந்த தினம் இன்று (14 may 1923)
*அரசையும்,அரசு எந்திரங்களை வாழ்நாள் முழுக்க விமர்சித்துக்கொண்டு இருந்தவர் தான் சென்
*ஏழ்மையில் இருந்தும்,பிரச்சனைகளில் இருந்தும் பெரும் போராட்டம் இல்லாமல் மக்கள் விடுபட இயலாது,அரசு அவ்வளவு எளிதில் அதனை அனுமதிக்காது என்று சொன்னவர்
*அரசைக் கடுமையாக விமர்சித்த மார்க்சிய கலைஞன் என்றும், இந்திய சினிமாவின் புதிய அலையை தோற்றுவித்தவர் என்றும் எல்லோராலும் கொண்டாடப்பட்டவர் மிருணாள் சென்
*இவர் எடுத்த ரே,சென் போன்ற படங்கள் பார்த்து தான் இந்தியா வறுமைமிக்க நாடு, இங்கே வாழும் மக்களின் வாழ்க்கைத்தரம் மிக மோசமானது என்பதை வெளிநாட்டவர்கள் புரிந்து கொண்டனர்
*நாங்கள் கலைக்கு உண்மையாக இருக்கிறோம்,உண்மையான கலை எப்போதும் உண்மைக்கு மிக நெருக்கமாக இருக்கும் என்றார்
*இவர் இறந்த போது அஞ்சலிக்கட்டுரையில் இந்தியன் எக்ஸ்பிரஸ் இப்படி எழுதியது
"இந்திய சினிமாவின் கொரில்லாப் போராளி" என்று
இந்திய சினிமாவின் தவிர்க்க முடியாத ஆகச் சிறந்த கலைஞன் மிருணாள் சென்
" படம் பார்க்க வரும் பார்வையாளனைத் தொந்தரவு செய்து அவனை அடுத்தகட்டம் நோக்கி நகர்த்தும், சிந்திக்க வைக்கும் பணியையே என் படங்கள் செய்ய வேண்டும்"
- மிருணாள் சென்
"எதையும் எதிர் கொள்கிறேன்,போராடுகிறேன்,பதற்றத்தில் பிழைத்திருக்கிறேன். பிழைத்திருக்கையிலே அப்பால் பார்க்கிறேன். கனவு காண்கிறேன்"
- மிருணாள் சென்
கருத்துகள்
கருத்துரையிடுக