"இந்து மதத்தை அழிக்க வேண்டும் என்று சொல்கிறீர்களே.. அதை அழித்துவிட்டு எந்த மதத்தை நிறுவப் போகிறீர்கள்.? கிறிஸ்துவமதம் உங்களுக்கு உவப்பானதா" ?
"அய்யோ நான் அப்படிச் சொல்லவில்லை".
'நல்லது. இந்து மதம் அழிய வேண்டாமா".?
"இல்லை இல்லை. அது அழிய வேண்டும். நான் சொன்னது கிறிஸ்துவம் எனக்கு உவப்பானதல்ல".
"ஓஹ் அப்ப இஸ்லாம்" ?
"தம்பி என்னை சிக்கலில் மாட்டிவிட வேண்டாம். வேற பேசலாமே"
"சரிவிடுங்கள். அம்பேத்கர் பவுத்தத்தை முன்மொழிந்தாரே. அதைப் பின்பற்றலாமா".?
"அம்பேத்கரிடம் எனக்குள்ள பிரச்சனையே இது தான். புத்த மதத்தில் பல சிக்கலுண்டு. முதலாவதாக மொட்டையடித்து காவி உடுத்துவது எனக்கு உவப்பில்லை. மேலும் மொட்டையடித்தால் என் மனைவிக்கு பிடிக்காது ".
"பிக்குகளுக்கு மட்டும் தான் மத நடைமுறை விதிகள் எல்லாம். மக்களுக்கு அல்ல".
"என்ன சொல்கிறீர்கள் என்று புரியவில்லை. பிக்குகள் என்றால் என்ன"?
"அய்யோ விடுங்கள் விடுங்கள். தெரியாமல் கேட்டுவிட்டேன். நீங்கள் எந்த மதம்".
"தி.க"
"அருமை. நீங்கள் எந்த ஊர்"
"புலியூர்".
கருத்துகள்
கருத்துரையிடுக